பாடல் 1211 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஹம்ஸவிநோதினி
தாளம் - அங்தாளம் - 6
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்தாளம் - 6
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தனதன தானான தான தனதன தானான தான தனதன ...... தனதான |
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண னாகாத நீச னநுசிதன் ...... விபா£தன் ஆசாவி சார வெகுவித மோகாச ¡£த பரவச னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் வாயாத பாவி யிவனென ...... நினையாமல் மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி மாஞான போத மருள்செய ...... நினைவாயே வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை கூறாம னீய அவனுகர் ...... தருசேடங் கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு கோலோக நாத குறமகள் ...... பெருமாளே. |
* 32 தத்துவங்கள் பின்வருமாறு:ஆத்ம தத்துவம் 20, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
** 'யாது தானர்' என்றால் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள் தானவருமாகிய அரக்கர்கள்.இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1211 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்துவம், உடையவன், தனதன, தானான, அரக்கர்கள், அவன், மக்கள், உடல்களை, வேடன், செய்து, பாவி, வேதாள, குறமகள், பெருமாளே, நீர்