பாடல் 1200 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானன தனன தனத்தத்த தானன தனன தனத்தத்த தானன தனன தனத்தத்த ...... தனதான |
வாடையில் மதனை யழைத்துற்று வாள்வளை கலக லெனக்கற்றை வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும் மால்கொள நெகிழ வுடுத்திட்டு நூபுர மிணைய டியைப்பற்றி வாய்விட நுதல்மி சைபொட்டிட்டு ...... வருமாய நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையி லகப்பட்டு ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு நாணமு மரபு மொழுக்கற்று நீதியு மறிவு மறக்கெட்டு நாயடி மையும டிமைப்பட்டு ...... விடலாமோ ஆடிய மயிலி னையொப்புற்று பீலியு மிலையு முடுத்திட்டு ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும் ஆகிய விதண்மி சையுற்றிட்டு மானின மருள விழித்திட்டு ஆயுத கவணொ ருகைச்சுற்றி ...... விளையாடும் வேடுவர் சிறுமி யொருத்திக்கு யான்வழி யடிமை யெனச்செப்பி வீறுள அடியி ணையைப்பற்றி ...... பலகாலும் வேதமு மமர ருமெய்ச்சக்ர வாளமு மறிய விலைப்பட்டு மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1200 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்தத்த, கொண்டு, கெட்டு, அடிமையாகி, கூறி, இரண்டு, வருகின்ற, விடலாமோ, பெருமாளே, செய்ய