பாடல் 1197 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனனத்தன தானன தானன தனனத்தன தானன தானன தனனத்தன தானன தானன ...... தனதான |
வடிகட்டிய தேனென வாயினி லுறுதுப்பன வூறலை யார்தர வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால் அடிபட்டலை பாவநிர் மூடனை முகடித்தொழி லாமுன நீயுன தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ பொடிபட்டிட ராவணன் மாமுடி சிதறச்சிலை வாளிக ளேகொடு பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே கொடுமைத்தொழி லாகிய கானவர் மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே. |
வடிகட்டப்பட்ட தேன் என்று சொல்லும்படி வாயினில் நுகர் பொருளாகிய இதழ் ஊறலை அனுபவிக்க, ஓரளவு ஊடலை நிகழ்த்தி, பின்பு தருகின்ற மாதர்களிடத்தே அலைப்புண்டு அலைகின்ற பாவியும் முழு முட்டாளுமாகிய என்னை, கீழ்த்தரமான தொழிலையே மேற்கொண்டவனாய் இழிந்த நிலையை அடைவதற்கு முன்னம், உனக்கு அடிமைப் பணி செய்யும் (பாக்கியத்) தொழில் எனக்குக் கிடைக்கும்படி எந்த நாளில் அருள்வாயோ? பொடிபட்டுப் போய் ராவணனுடைய சிறந்த முடிகள் சிதறும்படி வில்லும் அம்புகளும் கொண்டு சண்டை செய்வதற்கு போர்க்களத்தை அடைந்த மாயவனாகிய ராமனின் மருகனே, கொடுந் தொழிலைச் செய்யும், காட்டில் வாழும் வேடர்கள் பெருமை அடையுமாறு, அவர்கள் வாழ்ந்திருந்த சின்னக் குடிசையில் மான் போன்ற குறப்பெண் வள்ளியோடு வீற்றிருந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1197 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனனத்தன, செய்யும், மேவிய, பெருமாளே