பாடல் 1193 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனனானத் தனந்த தந்தன தனனானத் தனந்த தந்தன தனனானத் தனந்த தந்தன ...... தனதான |
முலைமேலிற் கலிங்க மொன்றிட முதல்வானிற் பிறந்த மின்பிறை நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார முகநேசித் திலங்க வும்பல வினைமூசிப் புரண்ட வண்கடல் முரணோசைக் கமைந்த வன்சர ...... மெனமூவா மலர்போலச் சிவந்த செங்கணில் மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம் வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு மயலாகிப் பரந்து நின்செயல் மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ தொலையாநற் றவங்க ணின்றுனை நிலையாகப் புகழ்ந்து கொண்டுள அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே துடிநேரொத் திலங்கு மென்கொடி யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி சுரர்வாழப் பிறந்த சுந்தரி ...... மணவாளா மலைமாளப் பிளந்த செங்கையில் வடிவேலைக் கொடந்த வஞ்சக வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன் வலிமாளத் துரந்த வன்திறல் முருகாமற் பொருந்து திண்புய வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1193 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வஞ்சக, வலிய, தந்தன, தனனானத், தனந்த, செவ்விய, இருந்து, மயக்கம், பெருமாளே, பிறந்த, புகழ்ந்து, மேல், வீசும்