பாடல் 1181 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தாளம் -
தாளம் -
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதான |
பூசல் வந்திரு தோடார் காதொடு மோதி டுங்கயல் மானார் மானமில் போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார் பூர குங்கும தூளா மோதப டீர சண்பக மாலா லாளித பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக ஆசை யென்கிற பாரா வாரமு மேறு கின்றில னானா பேதஅ நேக தந்த்ரக்ரி யாவே தாகம ...... கலையாய ஆழி யுங்கரை காணே னூபுர பாத பங்கய மோதே னேசில னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே வாச வன்பதி பாழா காமல்நி சாச ரன்குலம் வாழா தேயடி மாள வன்கிரி கூறாய் நீறெழ ...... நெடுநேமி மாத வன்தரு வேதா வோடலை மோது தெண்கடல் கோகோ கோவென மாமு றிந்திட நீள்வே லேவிய ...... இளையோனே வீசு தென்றலும் வேள்பூ வாளியு மீறு கின்றமை யாமோ காமவி டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல் மீது சென்றுற வாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால்கொடு வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1181 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தானன, தானா, நீண்ட, மீதே, பெருமாளே