பாடல் 1153 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தனதான தானான தானான தனதனன தனதான தானான தானான தனதனன தனதான தானான தானான ...... தனதான |
குனகியொரு மயில்போல வாராம னோலீலை விளையவினை நினையாம லேயேகி மீளாத கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக் கொளுவஅதில் மயலாகி வீறொடு போய்நீள மலரமளி தனிலேறி யாமாறு போமாறு குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முலைமூழ்கி மனமுருக மதராஜ கோலாடு மாபூசல் விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக வகைவகையி லதிமோக வாராழி யூடான பொருளளவ தளவாக யாரோடு மாலான வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி லெனவிரகு குலையாத மாதாவு நேரோத இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும் இனிமையொடு வருமாய மா¡£ச மானாவி குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி அநுமனொடு கவிகூட வாராக நீராழி யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன் அருணமணி திகழ்பார வீராக ராமோலி யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1153 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, பெரிய, தனதான, தனதனன, வந்த, இராவணனுடைய, தவறாமல், உயிர், காட்டுக்குப், போய், போர், என்னும், தனிலேறி, லேயேகி, பெருமாளே, சென்று, எல்லாம், காலம், காமப்