பாடல் 1138 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...... ; தாளம் -
தனத்த தத்தன தனதன தந்தத் தனத்த தத்தன தனதன தந்தத் தனத்த தத்தன தனதன தந்தத் ...... தனதான |
உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட் டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற் றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் ...... டணைமேல்வீழ்ந் துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட் டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த் துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் ...... டுளம்வேறாய் அருக்கி யத்தனை யெனுமவ சம்பட் டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத் தறப்பி தற்றிட அமளிக லங்கித் ...... தடுமாறி அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட் டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக் கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் ...... திடலாமோ தரைக்க டற்புகு நிருதர்த யங்கச் சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித் தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் ...... பிறைசூடி தனுக்கி ரித்திரி தரஎதி ருங்கொக் கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத் தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் ...... தனிவேலா பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித் திருக்கு முத்தம நிருதர்க லங்கப் படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் ...... கிரிசாடிப் படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக் குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற் பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1138 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, தனதன, தந்தத், தத்தன, அசுரர்கள், உடைய, உடல், உள்ள, வணங்கி, பெருமாளே, உனக்கு, அனுபவித்து