பாடல் 1131 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத் ...... தனதான |
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட் டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும் இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற் கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட் டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன் வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப் புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க் கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட் டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக் கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன் கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக் கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே. |
* அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பில் ஒன்றாகிய 'புய வகுப்பு' அவர் முருகனின் புய வெற்றிப் புகழ் பாடியதை உணர்த்தும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1131 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதத்தத், அணிந்த, வெற்றிப், ஒன்றின், மேல், கொண்டு, உணர்த்தும், பெறுவேனோ, பெருமாளே, தங்கள், சொல்லி