பாடல் 1125 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... : தாளம் -
தனன தந்தன தனனா தனதன தந்தன தனனா தனதன தனன தந்தன தனனா தனதன ...... தனதான |
அரிய வஞ்சக ரறவே கொடியவர் அவலர் வன்கண ரினியா ரவகுணர் அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக அலையில் மண்டிய வழியே யொழுகியர் வினைநி ரம்பிடு பவமே செறிபவர் அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற உரிய சஞ்சல மதியா னதுபெறு மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர் உபய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே உலக முண்டவர் மதனா ரிமையவர் தருவெ னும்படி மொழியா வவர்தர உளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ கரிய கொந்தள மலையா ளிருதன அமுது ணுங்குரு பரனே திரைபடு கடல டும்படி கணையே வியஅரி ...... மருகோனே கருணை கொண்டொரு குறமா மகளிடை கலவி தங்கிய குமரா மயில்மிசை கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ...... மிளையோனே திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து பொதுந டம்புரி யரனா ரிடமுறை சிவைச வுந்தரி யுமையா ளருளிய ...... புதல்வோனே சிகர வெண்கரி அயிரா வதமிசை வருபு ரந்தர னமரா பதியவர் சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1125 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தந்தன, தனதன, தனனா, உண்ட, கொண்ட, செலுத்திய, மீது, தரும், பெற்று, மிகவும், திரிபவர், ரவமே, டும்படி, மருகோனே, வீணாக, பெருமாளே, இல்லாதவர்கள்