பாடல் 1122 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான |
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ தப்பே சிப்பொற் ...... கனிவாயின் பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ ணைப்பூண் வெற்பிற் ...... றுகில்சாயக் கற்பா லெக்கா வுட்கோ லிக்கா சுக்கே கைக்குத் ...... திடுமாதர் கட்கே பட்டே நெட்டா சைப்பா டுற்றே கட்டப் ...... படுவேனோ சொற்கோ லத்தே நற்கா லைச்சே விப்பார் சித்தத் ...... துறைவோனே தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர் விக்கா முக்கத் ...... தொடும்வேலா முற்கா லத்தே வெற்பேய் வுற்றார் முத்தாள் முத்தச் ...... சிறியோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
அழகிய நாகண வாய்ப்புள்ளின் சீரான குரலைப் போன்ற குரலுடன், பொருந்தும்படி அழகிய கொவ்வைக் கனி போன்ற வாயினால் செவ்வையாகப் பேசி, நிலையில்லாத சிற்றின்பத்தின் பொருட்டு, (தங்கள்) உடலுக்குத் தக்கதான அந்த ஆபரணங்களை அணிந்துள்ள, மலை போன்ற மார்பகங்ககள் மீது ஆடை சாய்ந்து நெகிழ, ஆணையிட்டுத் தாக்கி, மனத்தில் உள்ள எண்ணங்களை வைத்து கொண்டு, பொருள் வேண்டியே கை கலந்து குத்துச் சண்டை செய்யும் விலைமாதர்களின் கண்களுக்கே வசப்பட்டு, பெரும் ஆசை வினைகளில் ஈடுபட்டு நான் துன்பப்படுவேனோ? சொல் அலங்காரத்துடன், உனது சிறப்புற்ற திருவடிகளைத் தொழுபவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே, தனது உடலை மாமரமாக்கிச் சூழ்ச்சி செய்த அந்தச் சூரன் திண்டாட்டத்தால் வேதனைப்படும்படியாக வேலயுதத்தைச் செலுத்தியவனே, ஆதி காலம் முதல் கயிலைமலையில் அமர்பவரான சிவபெருமானும், முத்தாம்பிகை எனப்படும் தேவியும் முத்தமிட்டு மகிழும் குழந்தையே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, தூய்மையானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரும் பெருமாளே.
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1122 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, அழகிய, பெருமாளே, முத்தா, லத்தே