பாடல் 1121 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான |
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம் பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ கித்தே கைக்குப் ...... பொருள்தேடித் தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ் திக்கோ டிப்பச் ...... சிமமான திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ தற்கோ லிப்பா விப்பார் நற்சீ ரைச்சா ரத்தற் ...... பரமானாய் தப்பா முப்பா லைத்தே டித்தே சத்தோர் நிற்கத் ...... தகையோடே முற்கா னப்பே தைக்கா கப்போய் முற்பால் வெற்பிற் ...... கணியானாய் முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
பொன் காசு வரிசைகளுக்காகவும், வேறு பல விதமான வரிசைகளுக்காகவும், நிலையற்ற சிற்றின்ப சுகத்தை விலை பேசுபவர்களுடைய பொய் மொழிகளுக்கும், உடல் அழகுக்கும் காம வெறிகொண்டு, காம இன்பத்தை அநுபவித்துச் செல்வதற்கு வேண்டிய பொருளைத் தேடுவதற்காக, தென் திசையிலுள்ள ஊர்களுக்கு ஓடியும், (வடக்கிலுள்ள) காசி முதலிய ஊர்களுக்கு ஓடியும், கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள ஊர்களுக்கு ஓடியும், (கப்பலேறித்) திரை கடலோடியும், அக்கடலிலுள்ள பல தீவுகளுக்கு ஓடியும் நான் வீணே அழிந்து போகலாமோ? உன்னைத் தியானித்து (தமது) சிந்தையில் வைப்பவர்கள் மேலான நற் கதியை அடைவதற்கு, அவர்கள் வழிபடும் பரம் பொருள் ஆனவனே, தவறாமல் நாள்தோறும், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வாழ்க்கைக் குறிக்கோள்களைத் தேடி வருகின்ற மக்கள் ஒருபக்கத்தில் நிற்க*, அருளுடனே முன்பு காட்டிலிருந்த பெண் வள்ளியின்பொருட்டு நீயே வலியச் சென்று, அவளின் முன்னே வள்ளி மலையில் வேங்கை மரமாக நின்றவனே, முத்துப்போன்ற அருமையானவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரவல்ல பெருமாளே.
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1121 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, ஓடியும், ஊர்களுக்கு, பொருள், மூன்று, பெருமாளே, வைக்கே, திக்கோ, முத்தா, வரிசைகளுக்காகவும்