பாடல் 1118 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான |
செட்டா கத்தே னைப்போ லச்சீ ரைத்தே டித்திட் ...... பமதாகத் திக்கா மற்பா டுற்றா ரிற்சீ ருற்றா ருக்குச் ...... சிலபாடல் பெட்டா கக்கூ றிப்போ தத்தா ரைப்போல் வப்புற் ...... றுழலாதே பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள் சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ எட்டா நெட்டா கத்தோ கைக்கே புக்கோ லத்திட் ...... டிமையோர்வா னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் ...... களைவோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1118 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, உனது, முத்தா, பெருமாளே