பாடல் 1116 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான |
உற்பா தப்பூ தக்கா யத்தே யொத்தோ டித்தத் ...... தியல்காலை உட்பூ ரித்தே சற்றே சற்றே யுக்கா ரித்தற் ...... புதனேரும் அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ லப்பா வித்துத் ...... திரிவேனுக் கப்பா சத்தா லெட்டா அப்பா லைப்போ தத்தைப் ...... புரிவாயே பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப் புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர் பொட்டா கக்குத் ...... தியவேலா முற்பா டப்பா டற்றா ருக்கோர் முட்கா டற்கப் ...... பொருளீவாய் முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. |
கெட்ட சகுனங்களைக் காட்டவல்ல ஐம்பூதங்களால் ஆகிய இந்த உடலைப் போற்றுதற்கு, உடன்பட்டு ஓடி, ஆபத்துக்கள் நேரும்போது உள்ளம் கவலையால் நிரம்பப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, கடவுளிடத்தே உண்டாகும் அன்பு பூண்டவராய் இல்லறத்தைத் தழுவி நிற்கின்ற மக்களைப் போல் ஏமாற்றித் திரிகின்ற எனக்கு, அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல் அப்பாற்பட்டு நிற்கும் ஞான அறிவை உபதேசித்து அருள்வாயாக. அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய் அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, கடலிடைப் புகுந்து, (சூரனுடைய) சூழ்ச்சி நிலையை (மாமரமாக நின்றதை) சமீபித்து, அந்தச் சூரன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலனே, (பொய்யா மொழிப் புலவர்) முன்னதாகப் பாட, அப்பாட்டைக் குற்றமின்றிப் பாடாத அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் பிழை நிலை பெற்றிருப்பதைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவனே*, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
என்று தொடங்கும் பாடல்கள்.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
திருமுருகாற்றுப்படை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1116 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தா, புலவர், அப்புலவருக்கு, பெருமாளே, முத்தா, சற்றே, பொற்பார்