பாடல் 11 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ்

ராகம் -
சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7
தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன ...... தனதான |
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே பனகந்துயில் கின்றதி றம்புனை கடல்முன்புக டைந்தப ரம்பரர் படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே பலதுன்பம்உழன்றுக லங்கிய சிறியன்புலை யன்கொலை யன்புரி பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி புரமுந்திரி வென்றிட இன்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே அடல்வந்துமு ழங்கியி டும்பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர் மனமுந்தழல் சென்றிட அன்றவர் உடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே மதியுங்கதி ருந்தட வும்படி உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே. |
* முருகனது அம்சமான உக்கிர பாண்டியன் ஆட்சியின் போது நாட்டில் வறுமை மிக, பாண்டியன் கனவில் சிவபெருமான் தோன்றி பொன்மலை மேருவைச் செண்டால் அடித்தால் பொன்னாகக் கொட்டும் என, பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து பொன் பெற்ற திருவிளையாடல் இங்கு கூறப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 11 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தனதந்தன, பாண்டியன், செண்டால், வந்து, மேருவைச், சுழன்று, வந்தருள், பெருமாளே, மேல், தோன்றி