பாடல் 10 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் - .......
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான |
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர் கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென இசைத்து நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும் நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு புழைக்கை தண்கட கயமுக மிகவுள சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 10 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மனம், எனவும், கொண்ட, தனத்த, தந்தன, வரும், நெறு, கிடு, குமு, மொகு, பெருமாளே, அணைத்த, நெருக்கி, எதிர்பொர, நிறைத்த, உதைபட, கொண்டு