பாடல் 1083 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...... தனதான |
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக் குலவிய தோலத் ...... தியினூடே குருதியி லேசுக் கிலமது கூடிக் குவலயம் வானப் ...... பொருகாலாய் உடலெழு மாயப் பிறவியி லாவித் துறுபிணி நோயுற் ...... றுழலாதே உரையடி யேனுக் கொளிமிகு நீபத் துனதிரு தாளைத் ...... தரவேணும் கடலிடை சூரப் படைபொடி யாகக் கருதல ரோடப் ...... பொரும்வேலா கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக் கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா சடையினர் நாடப் படர்மலை யோடித் தனிவிளை யாடித் ...... திரிவோனே தனிமட மானைப் பரிவுட னாரத் தழுவும்வி நோதப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1083 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானத், உடல், செய்யும், ஒப்பற்ற, அடைந்து, மாயப், பெருமாளே, சேர்ந்து