பாடல் 1073 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான |
கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங் கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச் சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1073 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மகிழ்ச்சி, எனக்கு, கொண்டு, பெருமாளே, சிவந்த, மலர்ந்த