பாடல் 1071 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனத்த தந்தனம் ...... தனதான |
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன் ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும் பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன் றமைத்த பெண்தனந் ...... தனையாரத் திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின் திறத்தை யன்புடன் ...... தெளியாதே சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென் திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன் தரித்த குன்றநின் ...... றடியோடுந் தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந் தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ் சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன் துணைச்செய் கின்றநின் ...... பதமேவும் சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1071 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நான், தனத்த, தந்தனம், இல்லாதவன், பெருமாளே, கின்றநின், மனம்