பாடல் 1070 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனத்த தந்தனம் ...... தனதான |
புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென் புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப் புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண் புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன் திளைக்கு நின்திறம் ...... புகலாதிந் த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந் தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங் குவட்டி லங்கையுந் ...... துகளாகக் கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங் கொதித்து மண்டுவெம் ...... பகையோடத் துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந் துரத்த னும்பிறந் ...... திறவாத சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1070 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தந்தனம், தனத்த, மீதும், மூன்று, வாய்ந்ததும், பெருமாளே, ரும்பைமென், அன்புடன், வந்த