பாடல் 1064 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான |
குருதி யொழுகி யழுகு மவல குடிலை யினிது ...... புகலாலே குலவு மினிய கலவி மகளிர் கொடிய கடிய ...... விழியாலே கருது மெனது விரக முழுது கலக மறலி ...... அழியாமுன் கனக மயிலி னழகு பொழிய கருணை மருவி ...... வரவேணும் பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் ...... பணிவேலா பணில வுததி யதனி லசுரர் பதியை முடுக ...... வரும்வீரா இரதி பதியை யெரிசெய் தருளு மிறைவர் குமர ...... முருகோனே இலகு கமல முகமு மழகு மெழுத வரிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1064 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, பதியை