பாடல் 1053 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
பிருந்தாவன சாரங்கா
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. |
* இப்பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான் என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன் ப்ரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாட்டு இது. இந்த வரியைப் பாடும்போது, முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக் கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1053 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஆடவும், னாராட, ப்ரபுட, தானான, நின், அருகில், மயிலும், ஊதியவரும், சபையில், கொண்டவரும், நடனம், வீசி, தானாட, மலரில், மாமாயன், பெருமாளே, தகிட, காளி