பாடல் 1044 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
அடைப டாது நாடோறும் இடைவிடாது போம்வாயு அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல் அவனி மீதி லோயாது ...... தடுமாறும் உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக உதறி வாச காதீத ...... அடியூடே உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன் உபய பாத ராசீக ...... மருள்வாயே வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது மகர வாரி யோரேழு ...... மமுதாக மகுட வாள ராநோவ மதிய நோவ வா¡£ச வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக் கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
உள்ளே அடைபட்டுப் போகாமல் ஒவ்வொரு நாளும் இடை விடாமல் போகின்ற மூச்சுக் காற்று முழுமையும் வீணாகாது உடலில் மீண்டும் வந்து (கும்பக முறையில்*) அடங்குமாயின், முக்தி வீடு கிடைக்கும் என்ற உண்மையை ஆராய்ந்து விரும்பி உனது திருவருளைப் பெறாத, ஒழுக்கம் இல்லாத கரும யோகியாய் வாழ்வைக் கழிக்காமல், இப் பூமியில் எப்போதும் நான் கெட்டு அலையாமல், எனது உடல் வேறு, நான் வேறு, என் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) கரணங்கள் வேறு - இவைகள் யாவும் வேறு வேறு என்று உதறித் தள்ளி, உரைகளுக்கு எட்டாத உன் திருவடிச் சரணங்களில் வீழ்ந்து, உள்ளம் உருகி, மேலான ஆசார ஒழுக்கம் வாய்ந்த சிறந்த சிவ யோகி ஆகும் பொருட்டு, உன் இரண்டு திருவடிகளாகிய ராஜபோகத்தை அருள்வாயாக. வடக்கே உள்ளதும், பருத்த அடிப்பாகம் உடையதுமாகிய மேரு மலையை எடுத்து (மத்தாக) நட்டு, அலைகள் மோதும் கடல்கள் ஓர் ஏழினின்றும் அமுது வரும்படி, ஒளி பொருந்திய மணி முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியின் உடல் (கயிறாக இழுத்ததால்) வலிக்கும்படியும், (தூணாகச் சாத்தப்பட்ட) சந்திரனின் உடல் நோவவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி விரும்பும் தனது ஆயிரம் தோள்களும்** நோவும்படியும், கடலைக் கடைந்த ஆதி மூர்த்தியாகிய கோபாலனின் மருகனே, சூலாயுதத்தையும், பிரம்ம கபாலத்தையும் ஏந்துகிற சிவபெருமானது மகனே, வேல் பிடித்த வேடர்களின் கொடிபோன்ற வள்ளியின் தலைவனே. பொன்னுலகமாகிய தேவர்கள் உலகைப் பரிபாலித்த அரசே, எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக உள்ளவனே, உனது கருணை மேரு மலையைப் போன்று பெரியது, தேவர்களுக்குப் பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** தேவர்களாலும் அசுரர்களாலும் பாற்கடலைக் கடைய இயலாதபோது, திருமால் தனது ஆயிரம் தோள்கள் கொண்டு கடலைக் கடைந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1044 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வேறு, பத்து, தானான, இடைகலை, பிங்கலை, மேரு, உடல், யோகி, கரும, நாடிகளுள், உருகி, பெயர், ஒன்று, விடும், யும், முனை, சுழு, சுவாசம், காற்றுக்கு, என்றும், வந்து, உனது, மீண்டும், உடலில், உள்ளே, ஒழுக்கம், நான், கடலைக், ஆயிரம், தனது, கருணை, பெருமாளே