பாடல் 1045 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
யமுனா கல்யாணி
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல அமுத பான மேமூல ...... அனல்மூள அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது அரிச தான சோபான ...... மதனாலே எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ மெளிது சால மேலாக ...... வுரையாடும் எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீத ...... மருள்வாயே விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு விபுத மேக மேபோல ...... வுலகேழும் விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல வெகுவி தாமு காகாய ...... பதமோடிக் கமல யோனி வீடான ககன கோள மீதோடு கலப நீல மாயூர ...... இளையோனே கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில் கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
பிராண வாயு மேற்கொண்டு செல்லாதபடி மூலாதார* கமலத்தின் மீது அங்ஙனம் செய்ததின் மூலம் அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ, மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில் இருந்து சிறிதும் மாறாமல், மகிழ்ச்சி தருவதான படிப்படியாக மேலேறும் யோக முறையாலே, நமனையும் தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை மிகவும் எளிதான வகையில் மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற எனது என்ற மமகாரமும், நான் என்ற அகங்காரமும் நீங்கி, பிற பொருள்கள் யாவும் நானே ஆகக்கூடிய மனோ பாவத்திற்கு எட்டாத பெரு நிலையைத் தந்து அருள்வாயாக. பரிசுத்தமான தேவியின் தொடி என்னும் கை வளையினின்றும் (மேலெழுந்து வந்த) யமுனை நதி போலவும்**, ஒப்பற்ற, எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த, மேகத்தைப் போலவும், ஏழு உலகங்களின் பரப்பையும் காணவல்ல பெரிய திருமால் (அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி விசுவ ரூபம் எடுத்தது போலவும், பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று, (திருமாலின் உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் இருப்பிடமான விண்ணில் உள்ள பிரம்ம மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற நீலத் தோகை விளங்கும் மயில் வாகனனே, என்றும் இளையவனே, கருணை மேகமே, பரிசுத்தமான கருணைக் கடலே, முடிவில்லாத கருணையை உடைய மேரு மலையே, தேவர்கள் போற்றும் பெருமாளே.
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** முன்பு உமாதேவியின் திருக்கரங்களில் சிவபிரான் முகத்தைப் புதைக்க, தேவியின் பத்து விரல்களிலும் வியர்வை சிந்தி அவையே கங்கை, யமுனை முதலிய நதிகளாக ஆயின - சிவபுராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1045 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - இதழ், கரம், கருணை, யமுனை, தானான, போலவும், தேவியின், அளவுக்கும், பெயர்களும், பரிசுத்தமான, உரிய, தன்மை, அமுத, வாயு, மீதோடு, மேரு, தகிட, பெருமாளே, மேலெழுந்து