பாடல் 1039 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான |
சாவா மூவா வேளே போல்வாய் தாளா வேனுக் ...... கருள்கூருந் தாதா வேஞா தாவே கோவே சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய் ஏவால் மாலே போல்வாய் காரே போல்வா யீதற் ...... கெனையாள்கொண் டேயா பாடா வாழ்வோர் பாலே யான்வீ ணேகத் ...... திடலாமோ பாவா நாவாய் வாணீ சார்வார் பாரா வாரத் ...... துரகேசப் பாய்மீ தேசாய் வார்கா ணாதே பாதா ளாழத் ...... துறுபாதச் சேவா மாவூர் கோமான் வாழ்வே சீமா னேசெச் ...... சையமார்பா சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. |
சாதல் இல்லாதவனும், மூத்தல் இல்லாதவனும், மன்மதனைப் போல் என்றும் இளையவனாகவும் விளங்குவாய், உனது காலின் கீழ்ப்பட்ட எனக்கு அருள் சுரக்கும் கொடையாளியே, அறிவு மிக்கவனே, தலைவனே, உன்னைச் சார்ந்து நிற்பவர்களுக்கு உயிர் போல் விளங்குபவனே, பாணத்தைச் செலுத்துவதில் திருமாலையே நீ நிகர்ப்பாய், என்னை ஆண்டு கொண்டு எனக்குக் கொடுக்கும் திறத்தில் மேகத்துக்கு ஒப்பாவாய் (எனக் கூறி) செல்வர்களைப் பொருந்தி அடைந்து, இத்தகைய பாடல்களைக் கேட்டு வாழ்தலே குறிக்கோளாக இருப்பவர்களிடம், நானும் வீணாகக் கூச்சலிடுதல் நன்றோ? பாடல்களாக நாவிடத்தே பொருந்தும் சரஸ்வதியைச் சார்ந்துள்ள பிரமனும், பாற்கடலில் நாகராஜனாகிய ஆதிசேஷன் என்ற படுக்கை மீது துயில் கொள்ளும் திருமாலும் தம்மைக் காண முடியாதபடி, பாதாள ஆழத்தில் உற்ற திருவடியை உடையவரும், ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு செலுத்தும் அரசருமாகிய, சிவபிரான் பெற்ற செல்வமே, செல்வப் பிரபுவே, வெட்சி மாலை அணிந்த மார்பனே, சிவகுமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1039 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, போல், தலைவனே, கொண்டு, இல்லாதவனும், பெருமாளே, வேளே, போல்வாய், கோவே