கழிவறையில் உதடுகள் - சிரிக்க-சிந்திக்க
கழிவறை கண்ணாடியில் உதட்டுச்சாயம் பூசிய உதடுகள் படம் எல்லா இடத்திலும் இருக்கும், பள்ளியின் துப்புரவாளர் எத்துனை முறை துடைத்து வைத்தாலும் அடுத்த நாளிலும் இதே பிரச்சினை.
பள்ளியில் சில குறும்புக்காரப் பெண்கள் உதட்டுச் சாயத்தை பூசிக்கொண்டு கண்ணாடியில் முத்திரை பதித்துவிட்டு செல்வது வழக்கம்.
தலைமைஆசிரியர் வகுப்பு வகுப்பாக சொல்லியும் உபயோகமில்லை. துப்புரவாளறுக்கு இது தேவையில்லாத வேலை.
அன்று காலை ஒவ்வொரு வகுப்பாக சென்று மாணவிகள் செய்யும் குறும்பால் துப்புரவாளர் எப்படி கண்ணாடியை சுத்தம் செய்கிறார் என்று காண்பிக்க செய்தார்.
துப்புரவாளர் "மாப்"பை கழிவறை தொட்டியில் நனைத்து கண்ணாடியை சுத்தம் செய்தார்.
இனி பெண்கள் கண்ணாடியை முத்தமிடுவதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கழிவறையில் உதடுகள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, உதடுகள், சிரிக்க, துப்புரவாளர், கண்ணாடியை, கழிவறையில், பெண்கள், சிந்திக்க, சுத்தம், செய்தார், வகுப்பாக, சர்தார்ஜி, கழிவறை, கண்ணாடியில், நகைச்சுவை