நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்? - சிரிக்க-சிந்திக்க

நீண்ட தூரம் நடந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.
மிகவும் பசியாக இருக்கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.
உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு தலையணை இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், நினைத்தவுடன் தலையணையும் வந்தது.
அதில் ஏறிப் படுத்தான். நடந்து வந்ததால் கால்கள் வலிக்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.
உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.
அவனுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு!
உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.
ஆஹா நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்துகொண்டிருக்கிறோம்! புலி ஏதேனும் வந்து நம்மை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? என நினைத்தான் அதன்படியே புலியும் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று.
தூய்மையான உள்ளமாக இருந்தால் அங்கு கடவுள் வசிப்பார். அவநம்பிக்கையுடன் இருந்தால்.......?
தேடல் தொடர்பான தகவல்கள்:
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்? - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, நடந்து, இருந்தால், உணவு, இருக்குமே, உடனே, நினைத்தான், நினைப்பதெல்லாம், மிகவும், சிந்திக்க, சிரிக்க, அவனுக்கு, வந்தது, விட்டால், இரண்டு, வந்து, கால்களை, மரம், சர்தார்ஜி, நகைச்சுவை, தொடங்கினான், என்பது, நன்றாக