கடி ஜோக்ஸ் 70 - கடி ஜோக்ஸ்

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா?
-***-
-***-
டாக்டர் : சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்!
சிஸ்டர் : ஏன்?
டாக்டர் : ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே
-***-
நிருபர் : நீங்க எழுதின நாவல் ரொம்ப Tasteஆ இருக்கே, ஏங்க ?
எழுத்தாளர் : கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சே
-***-
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
-***-
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 70 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், நீங்க, ஆபரேஷன், சிஸ்டர், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்