கடி ஜோக்ஸ் 52 - கடி ஜோக்ஸ்
நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..
டாக்டர் : ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?
நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!
-***-
ராமன் : ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
சோமன் : எப்படி?
ராமன் : என் மனைவியை நான்ஆசைப்பட்டுத் தானே... கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
-***-
ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : !!
-***-
பார்வையாளன் : நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியில உங்க ஓவியம் தான் பாக்குற மாதிரி இருந்துச்சு.
ஓவியர் : ரொம்ப நன்றிங்க.
பார்வையாளன் : ஆமா.. மத்த ஓவியங்களைச் சுத்தி ஒரே கூட்டம். பாக்கவே முடியல.!!!
-***-
பட்டாஸ் : மாப்ள அருணு ரயில் பயணங்கள் பத்தி எழுதிக்கிட்டு இருந்தானே என்னாச்சி ?
பாஸ் : அதெல்லாம் மலையேறி போச்சி !
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 52 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், ராமன், கட்டினார், பார்வையாளன், என்ன, ஆசிரியர், நர்ஸ், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, அவருக்கு