கணவன் மனைவி ஜோக்ஸ் 23 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே ஏன் ?
கணவன் : இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும் . ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்
-***-
மனைவி : ஏங்க! ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினாராமே. நான் செத்தா நீங்க என்ன கட்டுவீங்கன்னு ?
கணவன் : உன் தங்கச்சியை கட்டுவேன்.
-***-
மனைவி : இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?
கணவன் : எப்படி சொல்றே?
மனைவி : எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்ட ே இருக்கே, அதவச்சுதான்..
-***-
கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க
மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நான் லேட்டாதான் எழுந்திருப்பேன். என்ன சமைக்கிறதுன்னு தெரியலை. அதுசரி எத்தனை நாள் அவங்க இங்க இருப்பாங்க?
கணவன் : வரப்போறது எங்க அம்மா இல்லை உங்க அம்மா
மனைவி : அட அத நீங்க முதலியே சொல்லியிருக்கலாமே? எங்கம்மாவை பார்த்து 2 மாசம் ஆச்சு. ஆட்டோகாரங்க நம்பர் என்கிட்ட இருக்கு ஸ்டேசனுக்கு போய் அழைச்சுட்டு வரச்சொல்லனும். நாளைக்கு காலையில நல்ல டிபனா செய்யணும். இந்த முறையாவது அவங்களை நிறைய நாள் இருக்கச் சொல்லணும்.
கணவன் : ?!?!?!....
-***-
ம்னைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?"
கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 23 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், ", நாளைக்கு, அம்மா, என்ன, நான், நாள், காலையில, ஆச்சு, kadi, அவங்க, உங்க, நகைச்சுவை, நீங்க, மாசம்