கணவன் மனைவி ஜோக்ஸ் 24 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : “நீங்க எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர்ற மாதிரி நேற்று கனவு கண்டேன்“
கணவன் : “இன்னைக்கு அதைக் கட்டிக்கிறதா கனவு கண்டுவிடு. சரியாய்ப் போயிடும்...“
-***-
மனைவி : ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன் : இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு
-***-
கணவன் : “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“
மனைவி : “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“
-***-
கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 40,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா!!ஆண்கள் அதுல பாதிதான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கு. அதனால்தான் பெண்கள் அதிகம் பேச வேண்டியிருக்கு.
கணவன் : என்னது?திரும்ப சொல்லு..
-***-
மனைவி : என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
கணவன் : ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
மனைவி : சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
கணவன் : பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 24 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், திரும்ப, பேசறாங்களாம், வேண்டியிருக்கு, பெண்கள், நகைச்சுவை, kadi, கனவு, வந்தவுடனே, தான்