கணவன் மனைவி ஜோக்ஸ் 22 - கணவன் மனைவி சிரிப்புகள்
![Husband Wife Jokes Husband Wife Jokes](images/husband_wife_jokes.jpg)
மனைவி : “வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா.... நீங்க பேசாம நிக்கிறீங்களே....“
கணவன் : “திரும்பி வரட்டும்.... பதிலுக்கு நானும் உரசிக் காட்டுறேன் பாரு.“
-***-
மனைவி : ஏழிழு பிறப்பிலும் நான் உங்களுக்கு மனைவியாக பிறக்கவேண்டும்
கணவன் : எனக்கு இதுதாம்மா ஏழாவது பிறப்பு
-***-
கணவன் : டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.
மனைவி : ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.
கணவன் : கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.
மனைவி : ??????
-***-
மனைவி : “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?“
கணவன் : “அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டுண்டி.“
மனைவி : “எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?“
-***-
கணவன் : ஆபிஸிலிருந்து போனில் மனைவியிடம் தொடர்பு கொண்டு பங்கஜம், இன்னைக்கு முதன் முறையா சமையல் பண்ற... ஒத்துக்கறேன். அதுக்காக ஆபிஸ் டைமில் போன் பண்ணி வத்தக்குழம்பு எப்படி வைக்கிறதுன்னு கேட்டா எப்படி சொல்றது?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 22 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், மாப்பிள்ளை, கார், எப்படி, வாங்கிட்டு, நகைச்சுவை, kadi, பாரு, டார்லிங்