கணவன் மனைவி ஜோக்ஸ் 21 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன் : எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
-***-
மனைவி : என்னங்க.. நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
கணவன் : எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி : நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன் : பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
-***-
கணவன் : “அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?“
மனைவி : “எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்.“
-***-
கணவன் : (பேப்பரை படித்தபடி) ஒரு நாளைக்கு ஆண்கள் 15,000 வார்த்தைகளையும் பெண்கள் 30,000 வார்த்தைகளையும் பேசுகிறார்கள் என்று ஒரு ஆய்வுக்குறிப்பு தெரிவிக்கிறது.
மனைவி : அது உண்மைதான். ஏன்னா, உங்களுக்கு நாங்க ஒவ்வொரு விஷயத்தையும் ரெண்டு தடவை சொல்ல வேண்டி இருக்குது.
கணவன் : என்ன?
-***-
மனைவி : என் பிறந்த நாளைக்கு பால் பாயாசம் மட்டும் போதும் என்று கூறுகிறீர்களே ஏன்?
கணவன் : அன்றைக்கு மட்டுமாவது அதை நீ செய்யமாட்டாயா என்றுதான்...
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 21 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், என்ன, நான், அர்த்தம், வார்த்தைகளையும், நாளைக்கு, நகைச்சுவை, kadi, எனக்கு, மட்டும்