கணவன் மனைவி ஜோக்ஸ் 20 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : “வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது“
மனைவி : “அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?“
கணவன் : “வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்“
மனைவி : கர்ர்ர்ர்ர்ர்.....
-***-
கணவன் : என்னோட கண்ண நல்லா பாரு. என்ன தெரியுது?
மனைவி : உங்க உண்மையான அன்பு தெரியுதுங்க..
கணவன் : நாசமா போச்சு. தூசு விழுந்திருக்குடி. அதை எடு.
-***-
மனைவி : சாப்பாடு போட வா?
கணவன் : அடியே இன்னைக்கு நான் ஓட்டல்ல சாப்பிட்டுட்டேன்
மனைவி : அது சரி எவ்வளவு மாவாட்டிட்டு வந்தீங்க*
-***-
மனைவி : நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்...
-***-
மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண் ணிட்டீருந்தீங்க?
கணவன் : இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 20 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், என்ன, என்னோட, பால், நான், நகைச்சுவை, kadi, “வரதட்சணை, கல்யாணம்