கணவன் மனைவி ஜோக்ஸ் 19 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : "நீ ஓழுங்கா சமையல் செய்ய கத்துகிட்டா, சமையல்காரனை நிறுத்திடலாம்"
மனைவி : "நீங்களும் கார் ஓட்டவும், தோட்ட வேலையும் கத்துகிட்டா டிரைவரையும், தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்"
கணவன் : ?????
-***-
கணவன் : “இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?“
மனைவி : “சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.“
-***-
மனைவி : ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன் : விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
-***-
மனைவி : 'வத்தல்' வியாபாராம் பண்றவனுக்கு நம்ம பொண்ணைக் கொடுக்காதீங்கன்னு அப்பவே தலை தலையாய் அடிச்சிக்கிட்டேனே? கேட்டீங்களா?
கணவன் : என்ன ஆச்சி?
மனைவி : மாமியாக்காரீ பொரீஞ்சு தள்ளுறாளாம். நம்ம பொண்ணு 'வத்தலா' இளைச்சிப் போயிட்டா.
-***-
மனைவி : என்னங்க இது. நான் சொல்றதை இந்த கம்ப்யூட்டர் கேக்கவே மாட்டேங்குது...
கணவன் : கண்டிப்பா டார்லிங், ஏன்னா அது கம்ப்யூட்டர்.. உன் புருஷன் கிடையாது!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 19 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், நான், நம்ம, கம்ப்யூட்டர், நிறுத்திடலாம்", நகைச்சுவை, kadi, ", கத்துகிட்டா