கணவன் மனைவி ஜோக்ஸ் 18 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : நம்ம வீட்டுக்கு எங்க மானேஜரை சாப்பிட கூப்பிட்டிருக்கேன்.
மனைவி : என்ன திடீர்னு…?
கணவன் : தினமும் சாப்பிடும்போது அவர் மனைவியோட சாப்பாட்டை குறை சொல்லிக்கிட்டே இருக்கார், அதான்.
-***-
மனைவி : ஒரு மணி நேரமா ரூம்ல எதையோ தேடிக்கிட்டு இருக்கீங்களே. பேசாமல் கண்ணாடியை போட்டுட்டு தேட வேண்டியது தானே?
கணவன் : அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
மனைவி : ...? ...? ...?
-***-
கணவன் : டார்லிங், ராத்திரி என்ன டிபன்?
மனைவி : (கோபத்துடன் ) ஒரு டம்ளர் விஷம்!…
கணவன் : ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
-***-
மனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
கணவன் : அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
-***-
மனைவி : என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.
கணவன் : அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 18 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், இத்தனை, வருஷமா, அவரு, நான், பார்க்க, அவரை, கல்யாணம், என்னை, நினைச்சே, அந்த, அங்க, நகைச்சுவை, kadi, என்ன, தேடிக்கிட்டு, உக்காந்து, என்னங்க, தண்ணியடிக்கிறாரே