கணவன் மனைவி ஜோக்ஸ் 17 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : போதை அதிகமானா இப்படியா செய்வீங்க?
கணவன் : ஏன்? என்ன ஆச்சு?
மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்லை கெரஸின் பாட்டில்.
-***-
கணவன் : “என்ன இது மிக்ஸி, கிரைண்டர், புடவைன்னு ஏகப்பட்ட சாமான்களோட வேன்ல வந்து இறங்கிறே....!“
மனைவி : “நீங்க தானே சொன்னீங்க.... பேங்கில இருக்கிற நம்ம ஜாயிண்ட் அக்கவுண்டை குளோஸ் பண்ணனும்ன்னு. அதைத் தான் செய்துட்டு வர்றேன்.“
-***-
கணவன் : நான் செத்துட்டா நீ என்ன பண்ணுவே?
மனைவி : நானும் உங்க கூடவே செத்துப்போயிருவேன்
கணவன் : அப்பவே ஜோசியக்காரன் சொன்னான், செத்தாலும் "சனி" உன்ன விடாதுன்னு.
-***-
மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?
கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
-***-
மனைவி : என்னங்க நேத்து நைட் கனவுல நீங்க நம்ம வீட்டுக் கிச்சன்ல வேலைக்காரப் பெண்ணைக் கட்டிப்பிடிக்கிற மாதிரி வந்துச்சுங்க...
கணவன் : நல்லா யோசிச்சு பாரு.. கனவு வந்துச்சா.. இல்லாட்டி நைட் கிச்சன் பக்கம் வந்தியா...?
மனைவி : ???
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 17 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், நம்ம, என்ன, நான், நைட், நகைச்சுவை, kadi, உங்க, பாட்டில்