சிரிக்கலாம் வாங்க 56 - சிரிக்கலாம் வாங்க
தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?
காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..
-***-
"உங்க ஓட்டலோட பிராஞ்ச் பக்கத்து தெருவுல இருக்கே.. இங்க உள்ள பலகாரத்துக்கும் அங்கே உள்ள பலகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"ஒரு நாள்தான்!"
-***-
சார் இந்த கம்பெனில ஏதாச்சும் செக்யூரிட்டி வேல இருந்தா எனக்குக் குடுங்க சார்.
செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு?
சின்ன சத்தம் கேட்டா கூட முழிச்சுக்குவேன் சார்!
-***-
”காலங்காத்தால பல்பொடி கம்பனி முன்னால எதுக்கு எல்லாரும் வரிசையா நிக்கறாங்க?”
“ பல்பொடி விற்கப்படுமுன்னு எழுதுறதுக்கு பதிலா பால்பொடி விற்கப்படுமுன்னு எழுதியிட்டாங்களாம்!”
-***-
இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது;
நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
எப்படிச் சொல்ற?
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு, நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 56 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", என்ன, சார், பல்பொடி, விற்கப்படுமுன்னு, பலகாரத்துக்கும், உள்ள, சிரிப்புகள், கணக்கு, kadi, நகைச்சுவை