சிரிக்கலாம் வாங்க 55 - சிரிக்கலாம் வாங்க
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
-***-
நீ எழுதறதை எவனும் படிக்க மாட்டான்..
அது எங்களுக்கும் தெரியும்.. தன் கையே தனக்கு உதவி, நாங்களே எழுதி நாங்களே படிச்சுப்போம்
-***-
உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.
-***-
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
-***-
ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 55 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, ", தான், டாக்டருக்கு, ஆபரேஷன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், கவலை, நாங்களே