சிரிக்கலாம் வாங்க 42 - சிரிக்கலாம் வாங்க

"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்"
"ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"
-***-
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னார்!
-***-
படத்துக்கு ஏன் “வாக்கின் இண்டர்வியூ” ன்னு தலைப்பு வைச்சாங்க?
அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்.
-***-
"முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"
"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!"
-***-
ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 42 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, கட்டி, பையன், அடிச்ச, kadi, நகைச்சுவை, சிரிப்புகள், இன்னிக்கு