சிரிக்கலாம் வாங்க 20 - சிரிக்கலாம் வாங்க
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
-***-
"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?"
"ஒன்றும் செய்யக் கூடாது!"
-***-
என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே கிளினிக்கைத் திறந்து வெச்சிகிட்டு இருக்கீங்க?
தூக்கத்துல நடக்கற வியாதிக்காரன் எவனாவது வருவான்னுதான்.
-***-
கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!
-***-
ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 20 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", வீடு, என்ன, போகணும், டாக்டர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை