தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005
தவறான முகவரிக்கு அனுப்பினால்...
அனுப்பிய மனுதாரரின் விண்ணப்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு தகவல் தன்னிடம் இல்லை என்றால், மனுதாரருக்கு மனுவைத் திருப்பி அனுப்பக்கூடாது. அவரே அந்த மனுவினை சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு 5 நாட்களுக்குள்ளாக அனுப்பிவிட்டு, அவ்வாறு அனுப்பிய தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.(பிரிவு 6(3)).
தகவல் பெறக் கட்டணம்
மத்திய அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10. மாநில அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10, தகவல் கொடுக்க, நகல் எடுக்க- 1 பக்கத்திற்கு ரூ.2, ஆவணத்தை நேரில் பார்வையிட முதல் ஒரு மணி நேரம் இலவசம். அடுத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.5, பொருள் மாதிரி/உருவ மாதிரிக்கும் அசல் கட்டணம். CD, FLOPPY ஒன்றுக்கு ரூ.50 (G.O.M.S.NO.1012 / PUBLIC (ESH.1 & LEG) DEPT. DT.20.09.2006.
கட்டணம் செலுத்தும் முறை
மாநிலஅரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை நீதிமன்ற வில்லை ( Court Fee Stamp ) ரூ.10க்கு ஒட்டலாம் (அல்லது பொது தகவல் அலுவலர்............................ அலுவலகம் என்ற பெயரில் ரூ.10 வங்கி வரைவோலை (டி.டி) பெற்று அனுப்பலாம். அல்லது கீழ்க்காணும் தலைப்பில் அரசு கருவூலத்தில் ரூ.10 செலுத்தலாம்.
0075.00 Miscellaneous General Services – 800 Other Receipts BK cblockquotelection of Fees Under Tamilnadu Right To Information (Fees) Comission Rblockquotees – 2005 (DPC00 75 0 00 BK 0006)
மத்திய அரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை
ரூ.10க்கு டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் மட்டுமே கீழ்கண்ட தலைப்பில் எடுத்து அனுப்ப வேண்டும். (பேங்க், இரயில்வே, தபால்நிலையம், பாஸ்போர்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல்., பாராளுமன்றம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களுக்கு)
கணவன், மனைவி பணிப் பதிவேடுகளின் நாமினி விவரங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த விவரங்கள், குற்றப்பத்திரிகைகள், தண்டனைக்கோப்புகள், சம்பளப்பட்டியல் விவரங்கள், வாக்குமூல நகல்கள், அசையும், அசையா சொத்துகள் வாங்கிய விவரங்கள்.
Accounts Officer,
Office Of The………………………………………………………………..
ரயில்வே துறைக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தும் முறை
ரயில்வே துறைக்கு தகவல்களை பெறுவதற்கான கட்டணம் ரூ.10-ஐ போஸ்டல் ஆர்டராகவோ அல்லது ஏதேனும் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்று விண்ணப்பித்துடன் இணைத்தும் அனுப்பலாம்.
ரொக்கமாகவும் செலுத்தலாம்
மனுதாரர் சம்மந்தப்பட்ட துறைக்கே நேரில் சென்று ரொக்கமாக கட்டணம் செலுத்தலாம். செலுத்தியபின் ரசீது பெற்றுக் கொள்வது முக்கியம்.
கட்டணச்சலுகை யாருக்கு?
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவரானால் அதற்கான சான்று நகல் இணைத்தால் போதும். விண்ணப்பம் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும். (குறைந்த வருமானம் உடையோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதற்கான சான்றினை வட்டாட்சியரிடம் பெறலாம்)
எத்தனை தகவல் கேட்கலாம்?
ஒருவர், ஒரே விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். (அதிகபட்சமாக 10 முதல் 15 கேள்விகளுக்குள் கேட்பது நல்லது)
மூன்றாம் நபர் என்பவர் யார்?
விண்ணப்பிப்போர், தகவல் தரும் அலுவலகம் இரண்டிற்கும் அப்பாற்பட்ட தகவலுக்குட்பட்ட நபர் மூன்றாம் நபர் எனப்படுவார்.
இந்த மூன்றாம் நபரால் ரகசியமாக பாவிக்கப்பட்டு, ரகசியமாக பாவிக்கப்படுவதற்காக அளிக்கப்பட்ட ஆவணம், பதிவேடு, தகவல் ஆகியவை மூன்றாம் நபர் சார்ந்த தகவல் எனப்படும்.
மூன்றாம் நபர் குறித்த தகவல்கள்
மூன்றாம் நபர் பற்றிய ரகசிய ஆவணங்கள் தவிர மற்றவற்றைத் தரலாம். நமக்கு தரும் முன் அந்த மூன்றாம் நபருக்கு 5 நாட்களுக்குள் அறிவிப்பு தரவேண்டும். அந்த மூன்றாம் நபர் 10 தினங்களுக்குள் பதில் தர வேண்டும். ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பைத் தராத தகவலை மனு செய்த 40 தினங்களுக்குள் அளித்தல் வேண்டும்.
தகவல் பெறுவதற்கான கால அவகாசம்
தகவல் தர (அ) நிராகரிக்க (பிரிவு 7 (1))....................................... 30 நாட்கள்
சம்பந்தமில்லா துறைக்கு அனுப்ப்ப்பட்ட மனுவை சரியான துறைக்கு
அனுப்ப தேவைப்படும் கூடுதல் நாட்கள் (பிரிவு 6(3) )....................... 05 நாட்கள்
மூன்றாம் நபர் பற்றிய தகவலுக்கு கடிதம் எழுத பிரிவு 11(1)............ 05 நாட்கள்
மூன்றாம் நபர் பதில் அளிக்க (பிரிவு 11 (2) ).............................. 10 நாட்கள்
மூன்றாம் நபர் பற்றிய தகவல் அளிக்க (பிரிவு 11 (3) )........................... 40 நாட்கள்
குறைபாடுடைய பதில் (அ) மனுவிற்கு, முதல் மேல் முறையீடு
செய்ய ( பிரிவு 19 (1) ) ............................................................................ 30 நாட்கள்
இரண்டாம் முறையீடு (ஆணையத்திற்கு) செய்ய ( பிரிவு 19 (3) )...... 30 நாட்கள்
48 மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய தகவல்
கேட்கப்படும் தகவல் ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருப்பின், விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படவேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, Right to Information Act, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, தகவல், மூன்றாம், நபர், சட்டம், கட்டணம், பிரிவு, நாட்கள், உரிமைச், அரசு, அல்லது, அலுவலகம், விவரங்கள், துறைக்கு, வேண்டும், செலுத்தும், முறை, அறியும், right, information, நோக்கங்கள், சட்டத்தின், பெறும், பதில், பற்றிய, இந்தியச், செலுத்தலாம், அந்த, மத்திய, code, தகவலை, கேட்கலாம், எத்தனை, penal, பெறுவதற்கான, அதற்கான, கீழ், தரும், ரகசியமாக, முறையீடு, செய்ய, | , அளிக்க, விண்ணப்பத்தில், தினங்களுக்குள், மனுதாரருக்கு, ரயில்வே, சார்ந்த, inidan, தொடர்பான, அலுவலகங்களுக்குக், இந்திய, நேரில், நிறுவனங்களுக்கு, கொடுக்க, நகல், 10க்கு, பெற்று, போஸ்டல், அனுப்ப, indian, fees, அனுப்பிய, அனுப்பலாம், தலைப்பில், தண்டனைச்