கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
பத்மநாபபுரம்:
கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. உள்ளது. மன்னர் கால திருவாங்கூரின் தலைநகராக கி.பி. 1744 முதல் இருந்தது. அரண்மனை 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த அரண் மனையில் அரசர், அமைச்சர், அலுவலர்களுக்கு, பல கட்டடங்கள் இருக்கின்றன. இங்குள்ள இராமசாமி கோவிலில் இராமாயணக் கதை 45 காட்சிகளாக சித்தரிக்க ப்பட்டுள்ளது. இந்த அரண்மனை காலை ஒன்பது மணிமுதல் மாலை 5 வரை திறந்திருக்கும். திங்கள் விடுமுறை.
பத்மநாபபுரம் |
இந்திர விலாசம், தாமிரக் கடிதங்கள், கல்வெட்டுகள், பழங்கால நாணயங்கள், போர்க்கருவிகள் போன்றவை காட்சிக் கூடத்தில் உள்ளன. இதுதவிர, ஒரே மரத்தால் செய்யப்பட்ட சன்னல், வேனிற்காலத்தில் அரசர் படுக்கும் கல்கட்டில், பெரிய விருந்து மண்டபம், ஒரே மரத்தில் செய்யப்பட்ட தூணும் அதில் கடைந்தெடுத்த வளையமும், தூண்ட மணிவிளக்கு, சித்த மருத்துவக் கட்டில், அரசரின் வாள், நீராடுமிடம், பெரிய விலங்கும் காணத்தக்கவை. 17ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கடிகாரம் புகழ்பெற்றது. இது தவிர ஓவியக்கூடம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம். இங்கு திருவிதாங்கூர் அரசர் முடிசூட்டு விழா, திப்புவின் தோல்வி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களால் மன்னர் காப்பாற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிதாறல் என்கிற திருச்சாரத்து மலை:
சிதாறல் |
இங்குக் கிடைத்துள்ள கல்வெட்டு மூலம் கிடைக்கும் செய்தி:
இக்கல்வெட்டு விக்ரமாதித்ய வரகுணப் பாண்டியன் காலத்து இக்கோவில் முத்துவாள நாராயண குரத்தியார் என்ற சமண சமயப் பெண் துறவியால் எழுப்பப்பட்டது என்றும், கோயிலுக்கு ஒரு விளக்கும், தங்க மலரும் அவர் காணிக்கை யாகக் கொடுத்தார் என்றும் தெரிகிறது. அரிட்டநேமி படாரரின் மாணக்கியாகிய குணந்தாங்கி குறத்திகள் திருச்சாரத்துமலை படாரியார்க்குப் பொன் நகைகளும், பூவும் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது. மேலும் இங்குச் சமணர்களின் கல்வி நிலையம் இருந்ததற்கான ஏதுக்கள் கிடைக்கின்றன. பெண் சமணத் துறவியின் மக்களுக்குக் கல்வி புகட்டியதும், மக்களிடம் சமணப் பிரச்சாரம் செய்ததும் தெரியவருகிறது.
திருநந்திக்கரை குகைக் கோயில்:
இவ்வூரும் பழங்கால சமணத் தலமாகும். பின்னர் சைவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இங்குள்ள கபோதரத்தில் உள்ள மாதேவர் ஓவியம்தான் சேரர் கால ஓவியங்களில் கிடைத்த ஒரே சான்று. விக்கிரமாதித்ய வரகுணன் திருநந்திக் கரையில் தங்கி இருந்ததாகவும், ஒரு சமணத் துறவியியின் முன்னிலையில் தெங்கு நாட்டுக் கிழவன் மகள் முருகன் சேத்தியை திருமணம் செய்து கொண்டதாகவும், அரசியின் வாழ்க்கைக்குத் தேவையான நிலங்களை விட்டுக் கொடுத்ததாகவும் வரகுணன் காலத்திய செப்பேடு கூறுகிறது. இவ்வூர் பார்க்க வேண்டிய ஓரூராகும். பாறையில் அமைக்கப்பட்ட கோயிலுள் புகுவதற்கு வாயிலும், மழைநீர், வாயிலுக்கு வராமல் மேலே ஓடையும் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளன.
திருவட்டாறு:
ிருவட்டாறு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, செய்யப்பட்ட, கன்னியாகுமரி, tamilnadu, மாவட்டங்கள், சமணத், தெரிகிறது, இவ்வூர், அரசர், அமைந்துள்ளது, தகவல்கள், தமிழ்நாட்டுத், இக்கோவில், கோயிலின், கல்வெட்டு, சிற்பங்கள், | , தலம், பெண், என்றும், கேரள, தொலைவில், பெருமாள், கல்வி, திருவட்டாறு, வரகுணன், உள்ள, பார்க்க, கன்னியாகுமரியிலிருந்து, மன்னர், அரண்மனை, பத்மநாபபுரம், information, kanniyakumari, districts, இங்குள்ள, இங்கு, திருவிதாங்கூர், விழா, வேண்டிய, மண்டபம், பழங்கால, பெரிய, சிதாறல்