கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
வட்டக்கோட்டை:
குமரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது கோட்டை இது. கன்னியாகுமரியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதுவும் மார்த்தாண்ட வர்மா காலத்தில் டிலனாயினால் கட்டப்பட்டது. இக்கோட்டையின் சிறப்பு, கடலை நோக்கி அமைந்திருப்பதுதான். இது கடற்குளியலுக்கும் சுற்றுலாவுக்கும் ஏற்ற இடம்.
திப்பரப்பு அருவி:
திப்பரப்பு அருவி |
முட்டம்:
கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு அழகான கடற்கரையும், கலங்கரை விளக்கமும் உண்டு. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. ஊருக்குள் கடல் உள்நோக்கி அரைவட்ட வடிவத்தில் அமைந்திருப்பதாலும் ஊர் மிக உயரத்திலிருப்பதாலும் உடல் நலத்திற்கேற்ற வாழ்விடமாக இது அமைந்துள்ளது.
பேச்சிப்பாறை:
பேச்சிப்பாறை அணை |
பெருஞ்சாணி அணை:
பெருஞ்சாணி அணை |
கீரிப்பாறை: காளிகேசம்:
பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.
கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அமைந்துள்ளது, கன்னியாகுமரி, கன்னியாகுமரியிலிருந்து, அருவி, உள்ளது, தொலைவில், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, இங்கு, பேச்சிப்பாறை, கோவில், மூலம், பெருஞ்சாணி, தமிழ்நாட்டுத், தகவல்கள், காளிகேசம், | , முடிக்கப்பட்டது, செலவில், சரிவுகளில், பாசனம், ஏக்கர், நிலம், இலட்சம், கீரிப்பாறை, அழகான, தூரத்தில், இதுவும், information, districts, kanniyakumari, கடலை, திப்பரப்பு, தொடங்கப்பட்டு, கோதையாறு, இங்குள்ள, பார்ப்பதற்கு, சுமார்