திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
நத்தம் :
இச்சிறு நகர் மதுரையிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் வாணிகம் பெரிய அளவில் நடைபெறுகிறது. ஞாயிறுதோறும் சந்தை கூடுகிறது. விறகு, பச்சை மிளகாய் முதலியன இங்கிருந்து பல ஊர்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. பதினெட்டாம் நூ ற்றாண்டில் நத்தத்தில் ஒரு கோட்டை இருந்தது. இங்கு கட்டப்பட்ட நத்தம் ஜமீன் தார்களின் அரண்மணை இடிந்த நிலையில் இன்றும் காட்சி தருகிறது. இவ்வூரில் நடைபெற்ற போரில் ஹைதர் அலி தோல்வி அடைந்து திரும்பினார். இங்கு கைலாயநாதர் சிவன் கோவிலும், கத்தோலிக்கக் கல்வி நிலையமும் உள்ளன.
வெம்பரளி :
மதுரைக்கும் இவ்வூருக்கும் 22 கி.மீ. தொலைவு. அழகர் கோவிலிலிருந்து 8 கி.மீ இவ்வூரில் கொய்யாவும், நீலகிரித் தைலமரமும் மிகுதி.
கோட்டையூர் :
இவ்வூர்க் காட்டுக்கு ஆறுமாகானங்காடு என்று பெயர். இங்கு வெண்மையான பாறைப் படிவங்கள் உள்ளன. இதிலிருந்து ஆபரணங்களில் பதிக்கத்தக்க கற்கள் தயாரிக்கின்றனர்.
லிங்கவாடி, பரளி :
மாவு அரைக்கும் ஆலைகள் மிகுதியான இவ்வூரில் மாம்பழம், கொய்யாப்பழம் இவற்றின் தோட்டங்கள் அதிகம். இவை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பப் படுகின்றன.
செந்துரை :
நத்தத்திற்கு வடக்கே 21 கி.மீ தொலைவில் உள்ளது. புன்செய் வளமிக்கது. மலை வட்ட வடிவமாகக் காணப்படுகிறது. மா, பலா, கொய்யாத் தோப்புகள் வளமாக விளங்கு கின்றன. மலை மீது அணைக்கட்டித் தோட்டமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கும் சற்று உயரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சிறிய அருவி ஒன்று பாய்கிறது.
பழங்குடிகள் :
திண்டுக்கல் மாவட்டத்தில் பலநூ ற்றாண்டுகளாக பழங்குடியினர் பலரும் வாழ்ந் துள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தகுந்த பிரிவினராக பளியர், முதுவர், புலையர் முதலியோர் காணப்படுகின்றனர்.
பளியர் :
இவர்கள் பழனிமலைத் தொடரின் உயர்ந்தப் பகுதிகளில் வாழ்கின்றனர். சிதைந்த தமிழைப் பேசுகின்றனர். இவர்களது உச்சரிப்பை புரிந்து கொள்வது சிரமம். பழனீ மலையின் மிகப் பழங்குடியினர் இவர்களே. பழனியர் என்பதே பளியர் என மாறி வழங்குகிறது. இவர்களில் காட்டுப்பளியர், புதைப்பளியர் என்னும் இரு பிரிவினர் உள்ளனர். தேனடைகளை எடுூகக பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடியவர்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். காய், கனி, தேன், தானியங்களை யும் உண்பது வழக்கம். மரங்களின் மீது பரண்களை அமைத்தும், பாளை இடுக்கு களிலும் குகைகளிலும் வாழ்கிறார்கள். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடை இவைகளைக் கொண்டு பளியர்களை அடையாளம் காணலாம்.
முதுவர் :
பழனி மலைத்தொடரில் வாழ்கிறார்கள். பாண்டிய நாட்டுத் தமிழர் எனச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் மீனாட்சியம்மையை வணங்குகின்றனர். காடுகளின் ஊடே வாழ்வது இவர்தம் இயல்பு. வேட்டையாடுவதிலும், கம்பு, கேழ்வரகு, ஏலக்காய் ஆகிய வற்றைப் பயிர் செய்வதிலும் தேர்ந்தவர்கள். முதுவர் பேச்சுத் தமிழின் கிளை மொழிகளுள் ஒன்று.
புலையர் :
பழனி மலைத் தொடரில் புலையர் மிகுதியாக வாழுகின்றனர். வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலை நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இவ்வூரில், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, ஒன்று, உள்ளது, முதுவர், இங்கு, தகவல்கள், பளியர், புலையர், தமிழ்நாட்டுத், என்னும், இவர்கள், வழக்கம், | , பழனி, வாழ்கிறார்கள், காய், பெயர், information, districts, dindigul, நத்தம், தொலைவில், பழங்குடியினர், மீது, இவர்களில்