திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
மீன்வளம் :
திண்டுக்கல் மாவட்டத்தில இருக்கும் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களிலும் மீன்வளம் சிறந்து காணப்படுகிறது. அநேக ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், குளிர் நீரோடைகள் இம்மாவட்டடத்தில் உள்ளன. இவற்றில் மிக வேகமாக வளரக் கூடிய மீன் இனங்களான காட்லா, ரோடு, மிர்கால் மற்றும் சாதா கொண்டை மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. மீன்வளப் பணிகளுக்காக தேர்ந்தெடுத் திருக்கும் நீர்த்தேக்கங்கள் வரதமாநதி அணை, பெரிய கோம்பை அணை, பாலாறு,
புரந்தலாறு அணை முதலியனவாகும்.
பாலாறு-புரந்தலாறு அணையில் ரூ.13.2 இலட்சத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த மீன் பண்ணையில் 2 சிறிய மீன் குளங்களும், 8 மீன் குஞ்சு வளர்ப்புக் குளங்களும், 12 நர்சரி குளங்களும் கட்டப்பட்டுள்ளன. பழனியில் மீனவர்கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் துறை ஏரிகளில் மீன்பிடிப் பதற்கு பங்கு முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வேளாண்மை :
வைகை ஆறு, முல்லையாறு ஆகிய பெரிய ஆறுகளும், மணலாறு, இரவங்கல் ஆறு, கலிக்க வையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு, பிரப்பாறு, சின்னாறு, கொட்டக் குடியாறு பெருந்தலாறு, குதிரையாறு, கூலிளங்காறு, முத்துக் கோம்மையாறு, வராகநதி, பாம்பாறு ஆகிய ஆறுகளும் திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மையில் வளம் செழிக்க உதவுகின்றன.
வைகை அணையும், பெரியாறு அணையும் இம்மாவட்ட வேளாண்மை பாசனத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 2,74,707 ஹெக்டேர் சாகுபடி பரப்பாகும். நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, சிறுதிணைகள், நிலக்கடலை, பூக்கள், ஆமணக்கு, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, புகையிலை, கரும்பு முதலியன விளைவிக்கப்படுகின்றன.
கரும்பு உற்பத்தி பழனி வட்டத்தில் அதிகமாய் நடைபெறுகிறது. கொடைக்கானல் மலையில் பல வகையான காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொடைக்கானல்,நிலக்கோட்டை, திண்டுக்கல் வட்டங்களில் பெருமளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவையும் இம்மாவட்டத்தில் அதிகமாய் விளை கின்றன. வெற்றிலை பயிரிடுவதில் வத்தலக்குண்டு இம்மாவட்டத்தில் முதன்மைப் பெற்றுத் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மலர்களில் பெருமளவு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தேகிடைக்கின்றன. மலர் உற்பத்தியில் இம்மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 1757 ஹெக்டேரில் மலர்களை இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது. உற்பத்தியாகும் பூ வகைகளில் மல்லிகைப்பூ முதலிடம் வகிக்கிறது. கொடைரோடு, அம்பாத்துறை ஆகியவை மலர் உற்பத்தியில் குறிபிடத்தக்க இடங்கள். நாள்தோறும் ஆயிரக்கணகான கூடைகளில் இந்தியாவெங்கும் பூக்கள் இரயில், விமானம் மற்றும் பேருந்துகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன. பெருமளவு மலர்கள் உற்பத்தியால் இம்மாவட்டம் தமிழ்நாட்டின் ஹாலந்து என வழங்கப்படுகிறது.
சில இடங்களில் கருங்கண்ணிப் பஞ்சும், நிலக்கோட்டை, நத்தம் பகுதிகளில் கம்போடியாப் பஞ்சும் விளைகின்றன. வேடசந்தூரில் புகையிலை அதிகமாய் விளகிறது. கொடைக்கானல் மலையில் அரசின் ஆதரவோடு நூறு ஏக்கங்ா பரப்பில் கோக்கோ பயிரிடப்படுகிறது. ஏலக்காய் கேரளத்திற்கு அடுத்தப்பபடியாக இம்மாவட்டத்தில் அதிகமாய் விளைகிறது. பழனி மலையின் தொடர்ச்சியே ஏலமலை எனப்படும். இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏலக்காய் வேளாண்மையும் ஒரு காரணமாகும். பழனி மலைத்தொடரில் பழனி, பட்டிவீரன்பட்டி, சிறுமலை போன்ற பகுதிகளில் காப்பி பெருமளவில் விளைகிறது. இங்கு தேயிலையும் ஓரளவு உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டி வீரன்பட்டியிலிருந்து திராட்சைப் பழங்களும் பதியன்களும் ஏராளமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப் படுகின்றன. மேலும் பன்னீர் திராட்சையும் பயிரிடப்பட்டு, பானைகளில்அடைக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சிறு அளவில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் பெருமளவில் வாழைத் தோட்டங்கள் உள்ளன.
இங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் வாழைப்பழங்கள் அனுப்பப்படுகின்றன. இம்மாவட்டத்தில் நெல் சாகுபடியாகும் பரப்பு 33,200 ஹெக்டேர் ஆகும். அதில் அமோக விளைச்சல் தரக்கூடிய ரகங்களான ஐ.ஆர்.20, கோ.43, வைகை ஐஐடி 4786, பொன்னி, ஆடுதுறை 36 முதலியவை 20,810 ஹெக்டேரில் சாகுபடியாகின்றன. சோளம் இயல்பாக நன்செயில் 12,912 ஹெக்டேரிலும், மானாவாரியில் 63,062 ஹெக்டேரிலும் சாகுபடியாகிறது. கரும்பு சாகுபடி செய்யும் இயல்பான பரப்பு நன்செயில் 8922 ஹெக்டேர், மானாவாரியில் 7740 ஹெக்டேர். சுமார் 37,700 ஹெக்டேரில் பயிறு வகை உற்பத்தியாகிறது. எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை 47,35/ ஹெக்டேரிலும், சூரியகாந்தி 8000 ஹெக்டேரிலும், எள் 2500 ஹெக்டேரிலும், ஆமணக்கு 500 ஹெக் டேரிலும் பயிர் செய்யப்படுகின்றன. வேளாண்மைக் கல்லூரி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களால் பலவித வேளாண் கருவிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக பலவிதப் பெயர்களில் கலப்பைகள் இம்மாவட்டத்தில செய்யப்படுகின்றன. தோட்டக்கலைத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு பழமரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழில் வளர்ச்சி:
தொழில் :
திண்டுக்கல் மாவட்டத்தில் 3592 சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. 52 தொழிற்சாலை கள் உள்ளன. மதுரை-திண்டுக்கல்-கரூர் அகல இரயில்பாதை திட்டம் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும்.
பட்டுத்தொழில் :
பட்டுப்பூச்சி வளர்ப்பு இம்மாவட்டத்தில் சுமார் 2100 ஏக்கர் நிலப்பரப்பில் நடை பெறுகிறது. திண்டுக்கல், பழனியில் அரசுபட்டுக்கூடு விற்பனை அங்காடிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன் சத்திரம், வத்தலகுண்டு, பழனி ஆகிய இடங்களில் பட்டுத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் படுகின்றன.
தேனீ வளர்ப்பு :
கொடைக்கானல், மற்றும் காமனுர் என்னும் இடங்களில் செயல்படும் இரு தேனீ வளர்ப்புப் பண்ணைகள்.
சுற்றுலாதலங்கள் :
கொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக்கேணி ஆகியன இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இம்மாவட்டத்தில், கொடைக்கானல், பழனி, மீன், உற்பத்தி, ஹெக்டேரிலும், tamilnadu, ஹெக்டேர், தமிழக, மாவட்டங்கள், ஆகிய, செய்யப்படுகின்றன, அதிகமாய், பயிரிடப்படுகிறது, நிலக்கோட்டை, பெருமளவில், இடங்களில், அனுப்பப்படுகின்றன, கரும்பு, ஹெக்டேரில், வைகை, வேளாண்மை, தகவல்கள், தொழில், இம்மாவட்டம், குளங்களும், தமிழ்நாட்டுத், வகிக்கிறது, முதலிடம், பட்டுத்தொழில், வளர்ப்பு, தேனீ, | , வாயிலாக, மானாவாரியில், பரப்பு, விளைகிறது, இம்மாவட்டத்தின், படுகின்றன, ஏலக்காய், பகுதிகளில், நன்செயில், பஞ்சும், நத்தம், சுமார், வாழைப்பழங்கள், புரந்தலாறு, பாலாறு, குஞ்சு, பழனியில், ஆறுகளும், பெரிய, நீர்த்தேக்கங்கள், dindigul, districts, information, மீன்வளம், உதவுகின்றன, அணையும், புகையிலை, மலையில், பெருமளவு, மலர், ஆமணக்கு, பூக்கள், மொத்தம், சாகுபடி, நெல், நிலக்கடலை, உற்பத்தியில்