திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
சின்னக்கலயம்புத்தூர் :
சண்முகா நதிக்கரையில் உள்ள இவ்வூர் பழனிக்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. பத்தொன்பதாம் நூ ற்றாண்டில், ஏராளமான ரோம் நாட்டைச் சேர்ந்த தங்க நாணயங்கள் இவ்வூரில் தோன்டி எடுக்கப்பட்டன.
ஒட்டன்சத்திரம் :
தெலுங்கு பேசும் ஒட்டச்சாதியினரின் சத்திரத்தை ஒட்டி அமைந்த ஊர் ஆதலால் ஒட்டன்சத்திரம் ஆயிற்று. தாராபுரம், பழனீ, திண்டுக்கல், மதுரை ஆகிய நகரங் களுக்குச் செல்லும் சாலையில் பெரிய வியாபாரத் தலமாக விளங்குகிறது. ஏராளமான தரகு மண்டிகள் உள்ளன. வெங்காயம், வேர்க்கடலை, தக்காளி இவை இங்கு சிறப்பு விற்பனை பொருட்கள் ஆகும். கிறிஸ்துவ பெலோஷிப் மருத்துவமனை ஒன்று இங்கு இயங்குகிறது.
விருப்பாட்சி :
சிவனுக்குரிய விருப்பாட்சன் என்ற பெயரால், விருப்பாட்சி எனப்படுகிறது. பழனி
மலையின் அடிவாரத்தில் ஒரு காட்டாற்றின் கரையில் உள்ளது இவ்வூர். இங்கிருந்து 2கி.மீதொலைவில் தலைக்கூற்று, கோடரி என்னும் அருவிகள் உள்ளன. பஞ்சாமிர்தம் தயாரிக்க உதவும் ஒருவகை வாழைப்பழம் விருப்பாட்சியில் பயிராகிறது. வியாழக் கிழமை தோறும் நடக்கும் சந்தையில் நாரத்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா முதலிய பழங்களும், காய்கறிவகைகளும் ஏராளமாகக் குவிக்கப்படுகின்றன.
அத்திக்கொம்பு :
வருடம்தோறும் பங்குனியில் இங்கு மாட்டுச்சந்தை நடைபெறுகிறது.
கீரனுர் :
பழனிக்கு வடக்கே 15கி.மீ தொலைவில் உள்ளது. பாதி மக்கள் தொகையினர் முஸ்லீம்கள். சிவன் கோயிலில் சோழர்கால கல்வெட்டு இருக்கிறது. பொள்ளாச்சி, நீலகிரி பகுதிகளிலிருந்து பொருட்கள் வரவழைக்கப்பட்டு வாணிகம் சிறப்பாக நடைபெறுகிறது. பதினான்காம் நூ ற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஊருக்குச் சிறப்பைத் தருகிறது.
கொழக் கொண்டான் :
வள்ளல் குமணன் ஆட்சி செய்த இடமெனக் கருதப்படுகிறது. இதன் இயற்பெயர்
கொழுமங்கொண்டான்.
பெருமாள் மலை :
இப்பகுதியில் சுவைமிகுந்த ஆரஞ்சுப் பழங்கள் விளைகின்றன.
பண்ணைக்காடு :
இவ்வூர் வத்தலக்குண்டிலிருந்து கோடை மலைக்குச் செல்லும் வழியில் உள்ளது. மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, சிட்ரஸ் ஆகிய மரங்கள் அடர்ந்த சோலைகளும், வாழைத் தோட்டங்களும் இவ்வூருக்குச் செழுமை சேர்க்கின்றன.
பூம்பாறை :
அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம். இவ்வூர் குழந்தை வேலப்பர் கோயில் பிரசித்திப் பெற்றது. முருகனது செப்புத் திருமேனி 12 ஆம் நூ ற்றாண்டைச் சார்ந்தது.
செண்பகனுர் :
கொடைக்கானல் நகரின் புறநகர்ப் பகுதியில் சற்றுத் தாழ்வான நிலையில் அமைந்துள்ள இவ்வூரின் அமைதியும், கண்கவர் இயற்கை காட்சிகளும் நெஞ்சை அள்ளும். சேசு சபையினர் நடத்தும் அருட்காட்சியம் ஒன்று இவ்வூரில் உள்ளது. கொடைமலையைப் பற்றி நன்றாக அறிய வேண்டுமானால் இக்காட்சி கட்டத்தை அவசியம் பார்த்தாக வேண்டும். கத்தோலிக்க தேவாலயம், தோல் தொழிற்சாலை, மருத்துவ நிலையம், தச்சுப்பட்டறை, காய்கறித் தோட்டம் ஆகியன இங்குள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், உள்ளது, தமிழக, tamilnadu, இவ்வூர், மாவட்டங்கள், இங்கு, தகவல்கள், தமிழ்நாட்டுத், பொருட்கள், செல்லும், ஒன்று, ஆரஞ்சு, நடைபெறுகிறது, ஆகிய, | , விருப்பாட்சி, ற்றாண்டில், பழனிக்கு, information, districts, தொலைவில், dindigul, இவ்வூரில், ஏராளமான, ஒட்டன்சத்திரம்