விஜயநகர் அரசு
நிலவரி தவிர, திறைகள், பரிசுகள் ஆகியவற்றை சிற்றரசர்களும் படைத்தவைர்களும் அவ்வப்போது பேரரசுக்கு அனுப்பி வந்தனர். துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம் பல்வேறு தொழிலாளர்கள் மீதான வரிகள் ஆகியவையும் அரசாங்கத்தின் வருவாயாக இருந்தன. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. அரசரின் தனிப்பட்ட செலவுகள், அவர் அளிக்கும் கொடைகள், ராணுவத்திற்கான செலவுகள் போன்றவை அரசின் முக்கிய செலவினங்களாகும். நீதித்துறையைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளை சிதைத்தல், யானைக்காலால் இடறுதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன.
விஜய நகர ராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு முக்கிய பிரிவுகளை அது கொண்டிருந்தது. அயல்நாட்டு வணிகரிடமிருந்து உயர்ரக குதிரைகள் ராணுவத்திற்காக வாங்கப்பட்டன. ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்று அழைக்கபட்டனர். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்கள் அமரம் என்று அழைக்கப்பட்டது. படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது.
சமூக வாழ்க்கை
பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு ஜாதிப்பிரிவுகள் விஜயநகர சமூகத்தில் இருந்ததாக அல்லசானி பெத்தண்ணா தமது மனுசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். விஜயநகரின் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர சமூக வாழ்க்கை பற்றியும் அயல்நாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஜயநகர் அரசு , வரலாறு, இந்திய, விஜயநகர், அரசு, நான்கு, வழங்கப்பட்டன, வாழ்க்கை, முக்கிய, சமூக, நாயக், இந்தியா, அல்லது, விஜய, செலவுகள்