விஜயநகர் அரசு
வீரநரசிம்மரால் துளுவ மரபு தோற்றுவிக்கப் பட்டது. விஜயநகரத்தின் மிகச்சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவராயர் துளுவ மரபைச் சேர்ந்தவர். அவர் சிறந்த போர் ஆற்றல் மிக்கவர். கம்பீரமான தோற்றம் கொண்ட அவர் அறிவாற்றல் மிக்கவராகவும் காணப்பட்டார். படையெடுத்து வரும் பாமினி படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது. அச்சமயம், பாமினி அரசு மறைந்து அங்கு தக்காண சுல்தானியங்கள் நிறுவப்பட்டிருந்தன. திவானி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கிருஷ்ண தேவராயர் முஸ்லிம் படைகளை இறுதியாக முறியடித்தார். இதனால் பிஜப்பூர் சுல்தானுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது பீஐப்பூரின் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா கிருஷ்ண தேவராயர் அவரை முறியடித்து 1520ல் ரெய்ச்குர் நகரைக் கைப்பற்றினார். பின்னர், பீடார் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார்.
கிருஷ்ண தேவராயர் |
கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ஆந்திரபோஜர் என்று அவர் அழைக்கப்பட்டார்.
அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர். அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார். அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும் சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஜயநகர் அரசு , அவர், தேவராயர், கிருஷ்ண, வரலாறு, அரசு, இந்திய, அவரது, கைப்பற்றினார், சிறந்த, விஜயநகர், இந்தியா, கிருஷ்ணதேவராயரின், முறியடித்து, துளுவ, பாமினி, படைகளை, படையெடுத்து