இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சமயத் தலைவர்களில் தலைசிறந்தவர் இராமலிங்க அடிகளாவார். 1823 அக்டோபர் 5ல் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில் ராமய்யா பிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு கடைசி மகனாக அவர் பிறந்தார்.
இராமலிங்க அடிகளார் |
ஆன்மீக வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் 1858ல் வடலூருக்கு அருகில் கருங்குழி என்ற இடத்திற்கு சென்றார். பின்னாளில் அவர் வடலூரில் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். அவரது தெய்வீக ஆற்றல் பதினோராவது வயதிலேயே வெளிப்பட்டது. சாதிபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமது கருத்துக்களை பரப்புவதற்காக 1865ல் சமசர சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். மக்களிடையே அன்பையும் கருணையையும் போதித்தார். அவர் திருஅருட்பா என்ற நூலை இயற்றினார். அவரது மற்ற இலக்கியப் படைப்புகளில் 'மனுமுறை கண்ட வாசகம்', 'ஜீவகாருண்யம்' என்ற நூல்களும் அடங்கும். பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அவரது மொழி நடை மிகவும் எளிமையாகவே இருந்தது.
1870ல் வடலூருக்கு மூன்று மைல் தொலைவிலிருந்த மேட்டுக்குப்பம் என்ற இடத்துக்கு சென்றார். அங்கு 1872ல் சத்திய ஞான சபையை கட்டத் தொடங்கினார். கடவுளை ஜோதி வடிவமாக வழிபடலாம் என்று அவர் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
அய்யாவழி |
1809 ஆம் ஆண்டு தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமித்தோப்பு என்ற ஊரில் ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் பிறந்தார். அவரது இயற்பெயர் முடிசூடும் பெருமாள் என்றாலும் முத்துக்குட்டி என்றே அனைவரும் அழைத்தனர். ஜாதி முறை மற்றும் தீண்டாமைக்கு எதிராக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். சமய சடங்குகளை அவர் சாடினார். பலர் அவரை வழிபடுவதற்காக அவரது இருப்பிடம் தேடி வரத் தொடங்கினர். அவரது போதனைகள் காலப்போக்கில் 'அய்யாவழி' என்று பெயர் பெற்றது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் அய்யாவழி ஒரு தனிப்பட்ட சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தென் திருவாங்கூர் மற்றும் தெற்கு திருநெல்வேலி பகுதிகளில் அது வேகமாகப் பரவியது. அவரது மறைவுக்குப் பிறகு, அவர் இயற்றிய சமய நூல்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் மற்றும் அவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு அய்யா வழி சமயம் பரவியது. பல இடங்களில் 'நிழல் தங்கல்' என்ற வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் , அவரது, அவர், இந்திய, வரலாறு, அய்யாவழி, இராமலிங்க, சமூக, இயக்கங்கள், சீர்திருத்த, சுவாமிகள், ஸ்ரீ, வைகுண்ட, பரவியது, பிறந்தார், இந்தியா, அடிகளார், வடலூருக்கு, சென்றார், அடிப்படையாகக்