இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
முஸ்லிம் உலேமாக்களின் வைதீக பிரிவினரால் தோற்றுவிக்கப்பட்டதே தியோபாண்ட் இயக்கமாகும். இது ஒரு மறுமலர்ச்சி இயக்கமாகும். இதன் இரண்டு முக்கிய குறிக்கோள்கள்
1. குர்ஆன் மற்றும் ஹாடிஸ் இல் உள்ளவாறு இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது.
2. அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உரிமைப் போராட்டத்தை தொடர்வது.
முகமது உல் ஹாசன் என்ற புதிய தியோபாண்ட் இயக்க தலைவர் இப்பிரிவின் சமய கருத்துக்களில் அரசியல் மற்றும் அறிவார்ந்த சிந்தனைகளைப் புகுத்தினார். இஸ்லாமின் தாரளமான விளக்கங்கள் இவ்வியக்கத்தினரிடையே ஒரு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சீக்கிய சீர்திருத்த இயக்கங்கள்
இந்தியாவின் பிற இடங்களைப் போலவே பஞ்சாபிலும் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. பாபா தயாள் தாஸ் என்பவர் நிரங்காரி இயக்கத்தை தோற்றுவித்தார். கடவுளை உருவமற்றவராக (நிரங்கார்) வழிபடவேண்டும் என்று அவர் கூறினார். பாமா ராம் சிங் நாம்தாரி இயக்கத்தை நிறுவினார். இவரது சீடர்கள் வெள்ளை உடை அணிந்து, புலால் உண்பதை தவிர்த்தனர். 1870ல் லாகூர் மற்றும் அமிர்தசரசில் துவக்கப்பட்ட சிங் சபாக்கள் சீக்கிய சமுதாயத்தை சீர்திருத்த முற்பட்டன. 1892ல் அமிர்தசரசில் கால்சா கல்லூரி நிறுவப்படுவதற்கு இந்த சபாக்கள் உறுதுணையாக இருந்தன. குருமுகி மற்றும் பஞ்சாபி இலக்கியத்தை இவை ஆதரித்தும் போற்றின. சீக்கிய குருத்வாராக்களிலிருந்து ஊழல்மிக்க மகர்த்களை (பூசாரிகளை) நீக்குவதற்கு 1920ல் அகாலிகள் ஒரு இயக்கத்தை தோற்றுவித்தனர். இது தொடர்பான சட்டங்களை இயற்ற பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அகாலிகள் தங்களை ஒரு அரசியல் கட்சியாக மாற்றிச் கொண்டனர்.
பார்சி சீர்திருத்த இயக்கம்
1851ல் பிர்துஞ்சி நவுரோஜி மற்றும் எஸ்.எஸ். பெங்காலி என்பவர்களால் பம்பாயில் பார்சி சமய சீர்திருத்த சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பெண் கல்வியை அவர்கள் ஆதரித்தனர். தங்கள் சமூகத்தில் நிலவிய திருமண சடங்குகளில் சீர்திருத்தம் கொண்டுவர அவர்கள் விரும்பினர். 'ஜகத் மித்ரா' என்ற மாத இதழை நவ்ரோஜி நடத்தி வந்தார். இத்தகைய சீர்திருத்த முயற்சிகளால் பார்சி சமுதாயம் பெரும் முன்னேற்றம் கண்டது. 20ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பார்சிகளில் பெரும்பாலோர் முக்கிய பொறுப்புகளை ஏற்று இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறப்பான தொண்டினை ஆற்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் , சீர்திருத்த, இந்திய, வரலாறு, இயக்கங்கள், அரசியல், சீக்கிய, இயக்கத்தை, பார்சி, சமூக, தியோபாண்ட், இந்தியாவின், சபாக்கள், அகாலிகள், அமிர்தசரசில், இயக்கமாகும், இந்தியா, இயக்கம், முக்கிய, சிங்